தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சொத்து குவிப்பு வழக்கில் நேற்று சென்னை உயர்நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது. இதன்மூலம் பொன்முடி அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவியை இழந்தார்.
இதனால் பொன்முடி வகித்து வந்த உயர்கல்வித்துறையை, தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்க ஆளுநருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்தார்.
ஆளுநர் ஏற்று ஒப்புதல் அளித்த நிலையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்புகளாக உயர்கல்வி, அறிவியல் தொழில் நுட்பம் உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.