புற்று நோயாளிகளுக்கு பசியின்மை போக்கும் மருந்தை ஜிப்மர் மருத்துவமனை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளது. இந்த மருந்து ரூ. 2 கிடைக்கும். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட் டுள்ளது.
நாடு முழுவதும் தற்போது புற்றுநோய் மற்றும் அதன் பாதிப்புகளால் பெரும் இன்னல்களை சந்தித்து வருகிறோம். இந்த நோய்க்கு கை கொடுப்பது ஆராய்ச்சிகள் மட்டுமே. புற்றுநோய் சிகிச்சை 3 முறைகளை கொண்டது. மருந்துகள், அறுவை சிகிச்சை மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை ஆகும்.
பசியின்மை போக்கும் மருந்து இதனை கருத்தில் கொண்டு பயோடெக்னாலஜி ஆராய்ச்சி உதவி மற்றும் மேம்பாட்டு கவுன்சில் மத்திய அரசின் கீழ் அதன் முதன்மை திட்டமான நேஷனல் பயோ பார்மா மிஷன் மூலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளின் பங்களிப்பை கோரியுள்ளது.
இதன் ஒரு முயற்சியாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையை தலைமையாக கொண்டு ஆன்காலஜி கிளினிக்கல் டிரெயில் இந்தியா என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ.9 கோடியே 60 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் இந்தியாவில் உள்ள 6 மருத்துவமனைகள் பங்கு பெற்று வருகிறது.
இந்த குழு 6 விதமான புற்று நோய்களின் விவரங்களை பலதரப்பட்ட நோயாளிகளிடம் இருந்து சேகரித்து வருகிறது. இந்த குழு தங்களின் மருத்துவமனைகளிலும் ஆராய்ச்சிகளை தொடங்கியுள்ளது. இதில் ஜிப்மர் மருத்துவமனையின் ஆராய்ச்சியில் நாள் ஒன்றுக்கு ரூ.2 செலவில் புற்று நோயாளிகளுக்கு பசியின்மை போக்கும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஆராய்ச்சி உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டதோடு, அமெரிக்க சொசைட்டி ஆப் கிளினிக்கல் ஆன்காலஜியும் இதனை பசியின்மையால் அவதியுறும் கிமோதெரபி நோயாளிகளுக்கு பரிந்துரைக்கிறது.