திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2024 கடந்த அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி முதல் கடந்த 9 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த நாட்களில் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் படிவம் 6-33 ஆயிரத்து 942-ம், படிவம் 6-ஏ ஒன்றும், படிவம் 7- 8 ஆயிரத்து 724-ம், படிவம் 8-18 ஆயிரத்து 309-ம் பெறப்பட்டுள்ளது.
இந்த பணியை தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணைய அதிகாரி, வாக்காளர் பட்டியலுக்கான மேற்பார்வையாளராக தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சிக்கழக நிர்வாக இயக்குனர் மதுமிதா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் நேற்று அவர் திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் தொடர்பாக பெறப்பட்ட படிவங்கள் மீது விண்ணனூர் கிராமத்தில் நேரில் கள ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அவரது தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில ஆட்சியர் பா.முருகேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, நேர்முக உதவியாளர் (தேர்தல்) குமரன், வருவாய் கோட்டாட்சியர்கள் மந்தாகினி, தனலட்சுமி, செய்யாறு உதவி கலெக்டர் பல்லவி வர்மா மற்றும் தாசில்தார்கள் கலந்து கொண்டனர்.