உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவம்பர் மாதம் விமர்சையாக நிறைவு பெற்றது. தீபத் திருவிழாவை முன்னிட்டு சிறப்பாக பணியாற்றிய அண்ணாமலையார் திருக்கோயில் பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று கோயில் 4 ஆம் பிரகாரத்தில் உள்ள கலை அரங்கத்தில் நடைபெற்றது.

சிறப்பாக பணியாற்றிய திருக்கோயில் பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை கோயில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம் ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் டாக்டர் மீனாட்சிசுந்தரம், டிவிஎஸ் ராஜாராம், கோமதி குணசேகரன், பெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.