கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்க வகை செய்யும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
கடன்களை வசூலிக்க சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபடுவோருக்கு சிறை தண்டனை விதிக்க வகைசெய்யும் மசோதாவை சட்டப்பேரவையில் ஆய்வுக் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதற்த சட்ட மசோதாவுக்கு, தவாக வேல்முருகன், சிபிஎம் சின்னத்துரை, சிபிஐ தளி ராமசந்திரன், பாமக ஜி.கே.மணி, காங்கிரஸ் செல்வபெருந்தகை வரவேற்பு தெரிவித்தனர்.
முன்னதாக அதிமுக சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களை பலப்படுத்த வேண்டும் என்று ஒரு சில திருத்தங்களை முன் மொழிந்தனர். தவாக வேல்முருகன் பேசுகையில், பள்ளி கல்லூரி மாணவர்கள் எந்தவிதமான கல்வி கடன் வாங்கினாலும் மாணவர்களை மிரட்டி கடன் செலுத்த வைக்கும் வங்கிகள், தனியார் ஏஜென்சிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்ட திருத்தம் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
சிபிஎம் சின்னத்துரை பேசுகையில், வட்டி, வட்டி கணக்கீடும் முறை குறித்து கடன் வாங்குபவர்களுக்கு தெரிய வேண்டும் என்றும் கூட்டுறவு வங்கிகளை ஒருங்கிணைத்து தமிழ்நாடு வங்கி என உருவாக்கி கடன் வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய, துணை முதலவர் உதயநிதி ஸ்டாலின்:
தனி நபர்கள் அல்லது தனி நபர்கள் குழு, சுய உதவி குழுக்கள் ஆகியவற்றுக்கு கடன் வழங்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள நிதி நிறுவனங்களின் வலுக்கட்டாய வசூலில் இருந்து பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களைக் காக்க இந்த சட்ட முன்வடிவு கொண்டு வரப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் தெரிவித்துள்ள கருத்துகள் வரும் காலத்தில் ஆய்வு செய்யப்படும் என்று தெரிவித்தார்.