நாடே காஷ்மீரில் பெகல்காம் தாக்குதலால் சோக வெள்ளத்தில் மூழ்கி இருந்த சூழலில் அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி அதிமுக எம் எல் ஏக்களை உற்சாகமாக வைத்திருக்க விருந்து கொடுத்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
அதிமுக-பாஜக கூட்டணி அமைக்கப்பட்டவுடன் சுறுப்பாகியுள்ள எடப்பாடி பழனிசாமி எம்.எல்.எங்களுக்கு விருந்து வைக்கப்போவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தார். அந்த விருந்தின் மூலமாக அனைத்து எம்.எல்.ஏக்களும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவேண்டும் என்பது திட்டம். அந்த கையில் சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள தனது வீட்டில் இரவு விருந்து கொடுத்துள்ளார்.
பெகல்காம் தாக்குதலால் இந்தியா முழுவதும் மக்கள் கொந்தளித்து இருந்தவேளையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த விருந்தை தள்ளிவைத்திருக்கலாம்.ஆனால் அதையெல்லாம் மறந்துவிட்டு நேற்றுமுன்தினம் தடபுடலாக இந்த விருந்து நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வால் தமிழகத்தில் பலரும் முகம் சுளித்துள்ளனர். இந்த விருந்து நிகழ்ச்சியில் செல்லூர் ராஜூ, தங்கமணி மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் உள்பட முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
ஆனால், இந்த விருந்து நிகழ்ச்சியை செங்கோட்டையன் புறக்கணித்துள்ளார். அவரைப் போன்று சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி, பவானிசகார் சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரி, திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் அர்ஜூனனும் புறக்கணித்துள்ளனர்.
நேற்றுமுன்தினம் நடந்த விருந்தில் சிக்கன் 65, சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, மட்டன் சுக்கா, இறால் தொக்கு, மீன் வறுவல், முட்டையும், சைவ விருந்தில் இட்லி, தோசை, சப்பாத்தி, இடியாப்பம், அரிசி, சோறு, சாம்பார், ரசம், அவியல், பாயாசம், கூட்டு என்று தடபுடலாக விருந்து கொடுக்கப்பட்டுள்ளது.
எப்படி காஷ்மீர் பெகல்காம் தாக்குதலை மறந்துபோனார்கள்? என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.