முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ் விற்பனைக்கு ஓராண்டு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவு தமிழக அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு கூறியிருப்பதாவது:-
மயோனைஸ் தெரு உணவு வகைகள் மற்றும் ஷவர்மா மற்றும் வறுக்கப்பட்ட மற்றும் தந்தூரி போன்ற அசைவ உணவுகள் போன்றவற்றில் ஒரு முக்கிய சேர்க்கையாக மாறியுள்ளது.
முட்டை மூலம் செய்யப்பட்ட மயோனைஸ் உணவு, அதை உட்கொள்வோருக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது. எனவே உடனடியாக முட்டை அடிப்படையிலான மயோனைஸின் பயன்பாடு, விற்பனை அல்லது விநியோகத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்.
மீறுபவர்களுக்கு அபராதம், உரிமம் ரத்து செய்தல் அல்லது சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை உள்ளிட்ட கடுமையான தண்டனைகளை எதிர்கொள்வார்கள். மயோனைஸ் சார்ந்த பொருட்களை வாங்கும் போது நுகர்வோர் எச்சரிக்கையுடன் செயல்படவும், பொருட்களை சரிபார்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.