தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கமும், இணைப்பு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் கடலூர் மாவட்ட மையமும் இணைந்து பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கலைச்செல்வம் முன்னிலை வகித்தார். மாவட்ட அமைப்பு செயலாளர் தேவராஜ் வரவேற்புரை வழங்கினார். தமிழ்நாடு அரசு நியாய விலை கடை சிறப்பு தலைவர் கு. பாலசுப்பிரமணியம் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் சரவணன், மாநிலத் துணைத் தலைவர் சேகர், மாவட்ட செயலாளர் பாலமுருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட பொருளாளர் மற்றும் தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தின் பொருளாளர் சுரேஷ் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் பொது விநியோகத் திட்டத்திற்கு தனி துறை உருவாக்க வேண்டும், அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் பொட்டலமாக்கப்பட்டு சரியாக வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.