தமிழ்நாடு முழுவதும் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் கடைகளில் வேட்டி, சேலை வழங்கப்படுவது வழக்கம். அதே போன்று அரசின் மூலம் முதியோர் உதவித் தொகை, கணவரால் கைவிடப்பட்டோர் உதவித் தொகை, விதவை உதவித் தொகை, ஆதரவற்ற விவசாய கூலி, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை என பல்வேறு வகையான உதவித் தொகைகள் பெறும் பயனாளிகளுக்கும் பொங்கலுக்கு முன்பு அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் வேட்டி, சேலைகள் வழங்கப்படும்.
அந்த வகையில் பொங்கல் பண்டிகையையொட்டி ஆரணி தாலுகாவில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்காக 61,777 சேலைகளும், 60,209 வேட்டிகளும், முதியோர் உதவித் தொகை பெறுபவர்களுக்கு வழங்குவதற் காக 23,843 சேலைகளும் 9,102 வேட்டிகளும் என்று மொத்தம் 1,54,931 வேட்டி, சேலைகள் வந்துள்ளன. அவற்றை ஆரணி தாசில்தார் ரா.மஞ்சுளா பார்வையிட்டார். அப்போது சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சசிகலா, வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேசன் உடனிருந்தனர்.