சென்னையில் இன்று (மார்ச் 31) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.67,400க்கும், ஒரு கிராம் ரூ.8,425க்கும் விற்பனையானது.
தமிழகத்தில் மார்ச் 29ம் தேதி, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை, கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து, 8,360 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து, 66,880 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று முன்தினம் (மார்ச் 30) விடுமுறை தினம் என்பதால் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்படவில்லை.
இந்நிலையில் இன்று (மார்ச் 31) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.67,400க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,425க்கு விற்பனை ஆனது.
ஒரு சவரன் தங்கம் விலை புதிய உச்சமாக ரூ.67 ஆயிரத்தை தாண்டி நகை பிரியர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.