திருவண்ணாமலை நகராட்சி, சன்னதி தெருவில் உள்ள செவ்வா மடத்தில் “மக்களுடன் முதல்வர் மனு பதிவு செய்யும் முகாம் நடைபெற உள்ளதையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அருகில் மாநில தடகள சங்க துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், கோட்டாட்சியர் ஆர்.மந்தாகினி, நகராட்சி செயற்பொறியாளர நீலேஸ்வரன் ஆகியோர் உள்ளனர்.