தனக்கே தண்ணீ காட்டிய கோபத்தில் தான் எடப்பாடிக்கு ‘குழி’ பறிக்கத் தொடங்கி உள்ளார், அமித்ஷா.
பா.ஜ.க.,- அ.தி.மு.க., கூட்டணிக்காக பேச டெல்லி போனார் எடப்பாடி பழனிசாமி. அங்கு அமித்ஷாவை பார்த்த பின்பும், பிடி கொடுக்காமல் பேசி வந்தார். இதன் பின்னணி பற்றி அறிந்து கொண்ட அமித்ஷா எடப்பாடி பழனிசாமி மீது கடும் கோபத்தில் இருக்கிறார். இதனால் எடப்பாடியை ‘அரசியலில் வீழ்த்தியே ஆக வேண்டும்’ என்ற கட்டாயத்திற்கு வந்துள்ளார் அமித்ஷா.
இதற்கான காரணங்களை பார்க்கலாம் வாங்க.
நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்ததும், அவருக்கு உள்ள செல்வாக்கு பற்றி அறிந்த எடப்பாடி பழனிசாமி தனக்கு மிக, மிக வேண்டிய ஒரு நபரை கூட்டணி பேச்சு வார்த்தைக்கு விஜய்யிடம் அனுப்பி வைத்தார். துாதரிடம் பேசிய விஜய், ‘கூட்டணி வைத்தால் தனது கட்சிக்கு, 100 சட்டசபை தொகுதிகள், துணை முதல்வர், 9 அமைச்சர்கள், குறிப்பாக உள்துறை அமைச்சகம், தேர்தல் செலவுக்கு இவ்வளவு பணம் வேண்டும்’ என பெரிய கண்டிசன் போட்டார்.
இவ்வளவு தர முடியாது என முறுக்கிக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசியல் களத்தில் தன் வேல்யூ என்ன என்பதை விஜய்க்கு புரிய வைக்க வேண்டும் என திட்டம் போட்டார். அந்த நேரத்தில் பா.ஜ.க., கூட்டணிக்கு நட்புக்கரம் நீட்டியது. அமித்ஷாவுடனான சந்திப்பினை தனக்கான வாய்ப்பாக பயன்படுத்தி உள்ளார் எடப்பாடி.
இதனால் அழைப்பு வந்த உடனே அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, தன்னுடன் தனது தளபதிகளையும் அழைத்துச் சென்றார். அமித்ஷாவுடன் பேசிய போது, எந்த ஒரு உறுதியையும் எடப்பாடி வழங்கவில்லை. மாறாக வெளியே வந்து கொடுத்த பேட்டியில், தமிழக நலனுக்காக அமித்ஷாவைப் பார்த்தேன் என்றார்.
இதுதவிர ‘அமித்ஷாவே தன்னை அழைத்து கூட்டணி பேச்சு வார்த்தை நடத்துகிறார். நீங்கள் எனக்கு எம்மாத்திரம்’ என விஜய்க்கு ஜாடை, மாடையாக துாது அனுப்பியுள்ளார். விஜய் ஒத்துக்கொள்ளாவிட்டால், பா.ஜ.க.,வுடன் சேர்ந்து விடுவேன், எனவும் தெரிவித்துள்ளார். தனது கட்சிக்காரர்கள் கடந்த லோக்சபா தேர்தலில் நாம் பா.ஜ.க.,வுடன் கூட்டணி சேர்ந்திருந்தால், நமக்கு 25 லோக்சபா தொகுதிகளும், பா.ஜ.க.,வுக்கு நான்கு லோக்சபா தொகுதிகளும் கிடைத்திருக்கும்.
அந்த சூறாவளிக்குள் சிக்கி இருப்பது அதிமுகவா..? எடப்பாடியாரா..?
அந்த வாய்ப்பினை கெடுத்து விட்டீர்கள். இப்போதும், நாம் தி.மு.க., பா.ஜ.க., என்ற இரு பெரும் கட்சிகளை எதிர்த்து நிற்கிறோம். பா.ஜ.க.,வுடன் சேர்ந்தால், மத்தியில் ஆளும் கட்சி கூட்டணி என்ற அந்தஸ்த்து கிடைக்கும். தி.மு.க.,வும் நம் மீது அதிகளவில் பாய்ச்சல் காட்டாது என கூறியுள்ளனர்.
இதனை கேட்ட பின்பும், ‘அதான் இரண்டு பக்கமும் பேசுகிறோமே… விஜய் ஒத்துக்கொள்ளாவிட்டால் பா.ஜ.க.,வுடன் சேர்ந்து விடுவோம்’ என கூறியுள்ளார். இந்த விவகாரங்கள் எல்லாம் இன்ச், பை இன்ச்சாக அமித்ஷாவை சென்றடைந்துள்ளது. இதை அறிந்த அமித்ஷா கொந்தளித்து விட்டார். உடனே அண்ணாமலையை வரச்சொன்னார். அவரிடம் பேசியதும், எடப்பாடியின் அரசியல் வாழ்க்கைக்கு பெரிய செக் வைக்க வேண்டும் என வியூகம் வகுத்துள்ளார்.
அதன் ஒரு பகுதியாகவே செங்கோட்டையனை டில்லிக்கு அழைத்து ஆலோசனை நடத்தி உள்ளார். இனி செங்கோட்டையன், ஓ.பி.எஸ்., சசிகலா, டி.டி.வி., தினகரன் இணைந்து இரட்டை இலையை கைப்பற்ற முயற்சி செய்வார்கள். அ.தி.மு.க., உடையும். தமிழக சட்டசபை தேர்தலில் இப்போது நாம் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து சாதிக்கப்போவது ஒன்றுமில்லை.
ஆனால் எடப்பாடி செய்த துரோகத்திற்கு சரியான தண்டனை வழங்கி, அவரை வீழ்த்தியே ஆக வேண்டும். அதேநேரம் அ.தி.மு.க.,வை கைப்பற்றி, எடப்பாடி அணியினை வீழ்த்தி விட்டு, நாம் மக்களை சந்திக்க தேவையான மாற்று வழிகளை தேர்வு செய்யுங்கள் எனவும் கட்டளையிட்டுள்ளாராம்.
இந்த தைரியத்தில் தான், ஓ.பி.எஸ்சும் ‘பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீயாக வெளியேறா விட்டால் அசிங்கப்பட்டு வெளியேற்றப்படுவார்’ என பொங்கியுள்ளார். இதனால் தமிழக அரசியல் களத்தில் இப்போதைக்கு சூறாவளி அ.தி.மு.க.,வை சூழ்ந்துள்ளது என்று அரசியல் பார்வையாளர்கள் பேசி வருகின்றனர்.