“தமிழகத்தின் ஜிஎஸ்டியை சரியாக வாங்கிக்கொள்கிறீர்கள். ஆனால், பட்ஜெட்டில் தமிழகத்துக்கு நிதி ஒதுக்க மாட்டேன் என்கிறீர்கள்” என்று தவெக பொதுக்குழுவில் விஜய் மத்திய அரசு மீது குற்றம் சாட்டினார்.
தமிழகத்தில் இருந்து வரும் ஜிஎஸ்டியை சரியாக வாங்கிக்கொள்கிறீர்கள். ஆனால், பட்ஜெட்டில் தமிழகத்துக்கு நிதி ஒதுக்க மாட்டேன் என்று சொல்கிறீர்கள். இங்கே படிக்கும் குழந்தைகளுக்கு கல்வி நிதியை ஒதுக்கவில்லை. ஆனால். மும்மொழி கொள்கையை திணிக்கிறீர்கள். தொகுதி மறுவரையறை என்று தமிழகத்தின் நாடாளுமன்ற தொகுதி எண்ணிக்கையிலும் கைவைக்க பார்க்கிறீர்கள்.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்று நீங்கள் தொடங்கியபோதே புரிந்துவிட்டது, பிரதமர் சார், உங்கள் பிளான் என்ன என்பது. உங்களிடம் சொல்லிக்கொள்வது, தமிழ்நாட்டை கொஞ்சம் கவனமாக கையாளுங்கள் சார், ஏனென்றால், தமிழ்நாடு பல பேருக்கு தண்ணீர் காட்டிய மாநிலம். எனவே, பார்த்து செய்யுங்கள்.
தமிழகத்தின் இயற்கை வளங்களுக்கு எதிராக கொண்டுவரும் திட்டங்களை ஏற்க முடியாது. எங்கள் மண், மக்களை பாதிக்கிற திட்டங்களை செயல்படுத்தாதீர்கள். அதனை எதிர்ப்போம். அடுத்த வருடம் தமிழ்நாடு இதுவரை சந்திக்காத வித்தியாசமான தேர்தலை சந்திக்கும். இங்கே இரண்டு பேருக்கு இடையே தான் போட்டியே. அது தவெக மற்றும் திமுக இடையே தான்” என்று ஆவேசமாக பேசினார்.