திருவண்ணாமலை, டிச.21
திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடந்த வாராந்திர மக்கள் குறை தீர்வு கூட்டத்தில், பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை எஸ்.பி கார்த்திகேயன் பெற்று விசாரணை நடத்தினார்.
திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தில், புதன்கிழமைதோறும் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடத்தப்படுகிறது. அதன் படி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று எஸ்பி கார்த்திகேயன் தலைமையில் குறைதீர்வு கூட்டம் நடந்தது. அதில், ஏடிஎஸ்பி சவுந்திரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது, சொத்து பிரச்னை, பாகப்பிரிவினை தகராறு ஆகியவற்றை தீர்க்கக்கோரியும், போலீஸ் ஸ்டேஷன்களில் அளிக்கப்பட்ட புகார்கள் மீது விரைத்து நடவடிக்கை எடுக்கக்கோரியும் பல்வேறு மனுக்கள் அளிக்கப்பட்டன. மேலும், தன்னுடைய உடல் நலக்குறைவை காரணம் காட்டி, தனது கணவருக்கு அவரது குடும்பத்தினர் வேறு திருமணம் செய்ய முயற்சிப்பதாக பெண் ஒருவர் புகார் அளித்தார். அதன்மீது, மகளிர் போலீ சார் உரிய விசாரணை நடத்த எஸ்பி உத்தரவிட்டார். அதேபோல், குடும்ப சொத்துக்களை பாகம் பிரிப்பதில் சகோதரர்களுடன் ஏற்பட்டுள்ள பிரச்சனையை தீர்க்கக்கோரி. தொழிலாளி மனு அளித்தார். அது தொடர்பாக ஏற்கனவே மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியரான திருவண்ணாமலை அடுத்த செ.அகரம் கிராமத்தை சேர்ந்த அஜீத் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் சித்தலபாக்கம் பகுதியை சேர்ந்த பிரித்தா ஆகியோர், பாதுகாப்பு வழங்கக்கோரி எஸ்.பியிடம் மனு அளித்தனர். இருவரும் சில ஆண்டுகளாக காத லித்து முறைப்படி பதிவு திரு மணம் செய்து கொண்ட தாகவும், இது தெரிந்ததால் பிரித்தாவின் பெற்றோர் மற் றும் உறவினர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் மனுவில் தெரிவித்துள்ளனர். எனவே, தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என குறிப்பிட் டுள்ளனர். இது தொடர் பாக, இருதரப்பு பெற்றோரையும் அழைத்து உரிய விசாரணை நடத்த எஸ்பி 5 உத்தரவிட்டார்.
“நேற்று நடந்த சிறப்பு முகாமில் 21 பேர் கோரிக்கை மனுக்களை அளித்தனர். அந்த மனுக்கள் மீது தொடர் விசாரணை நடத்தி தீர்வு காணுமாறு, சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு மனுக்களை பரிந்துரை செய்து எஸ்.பி அனுப்பினார்.