வேலூர், டிச. 21:
பள்ளி மேலாண்மை குழுவின் தீர்மானங்களை அடிப்படையாக கொண்டு அரசு பள்ளிகளில் அத்தியாவசிய உள் கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள பள்ளி கல்வி துறையின் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாண வர்களின் கற்றல் மற்றும் கட்டிட மேலாண்மை ஆகியவற்றுக்கு சிறப்பு நேற்குழு ஒன்றை நியமிக்கலாம் என்று இலவச மற்றும் கட்டாய ஆரம்ப கல்வி சட்டம் 2009 அறிவுறுத்தியுள் ளது. அதன்படி அனைத்து அரசு பள்ளிகளிலும் எஸ். எம்.சி எனப்படும் பள்ளி மேலாண்மை குழு அமைக்கப்பட்டுள்ளது. இதை மறுசீரமைக்க கடந்தாண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட் டது. இதற்கு உறுதுணையாக இருக்கும் வகையில் ‘டிஎன்எஸ் இடி பேரண்ட் ஆப்’ உருவாக்கப்பட்டது. இந்த ஆப்பில் பள்ளியின் தேவைகள் படிப்படியாக பதிவு செய்யப்பட்டு வருகிறது.
சமீபத்தில் கிடைத்த தகவலின் படி அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர். பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், மக்கள் பிரதிநிதிகள் தங்களது 60 சதவீத தேவைகள் குறித்து ஆப் மூலம் பதிவிட்டுள்ளனர். அதில் முதன்மையான நோக்கம் என்பது பள்ளியின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவது. மாணவர்க ளின் கற்றல், வகுப்பறைகள், பள்ளி வளாகம், கல்வி உபகரணங்கள், கல்வியின் தரம் ஆகியவற்றை தரம் உயர்த்த உயர்த்த கோரிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிகளுக்கு தேவைப்படும் உள் கட்டமைப்பு வசதிகளை பள்ளி மேலாண்மை குழுக்கள் மூலம் உறுதி செய்ய வேண்டும் என்றும் உரிய வழிகாட்டுதல்களு டன் பள்ளிக் கல்வித் துறை செயலாளர் குமர குருபரன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில்:
பள்ளிக் கல்வித் துறையில் பெரும்பாலான தரவுகளை டிஜிட்டல் மயமாக்குவதை செய்திருக்கும் மாநிலமாக நாடு திகழ்கிறது. இதனை அடுத்த கட்டத்திற்கு விரிவுபடுத்தும் வகையில் பள்ளி மேலாண்மைகள் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
இதற்காக புதிய உள் கட்டமைப்பு வசதிகளின் தேவை குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட வேண்டும். என்னென்ன தேவைகள் இருக்கின்றன என்று குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும். இவற்றை ஆப்பில் பதிவு செய்ய வேண்டும். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு நேரடியாக இதன் மூலம் வெளிப்படியாக தெரிய வரும். இத்தகைய பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கையால் பள்ளி செயலாளருக்கு சில பரிந்துரைகளை வழங்க முடியும் அதன் பிறகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் உரிய ஆலோசனைகள் மேற்கொண்டு தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பார். இத்தகைய நடைமுறையை சரி யான முறையில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் பின்பற்ற வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஓட் டு மொத்த கட்டமைப்பும் எப்படி செயல்படும் என்ற விவரமும் வெளியிடப்பட் டுள்ளது. முதலில் நம்ம ஸ்கூல் நம்ம ஊர் பள்ளி என்ற திட்டத்தின் கீழ் தேவைகளை கண்டறிய வேண்டும். இதையடுத்து பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் மூலம் தேவைகளை பட்டியலிட வேண்டும். இவற்றை பள்ளி மேலாண்மை குழுவினர் விரிவாக அலசி தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.