கீழ்பென்னாத்தூர், டிச. 18-
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஆராஞ்சி, வயலூர் ஆகிய ஊராட்சிகளில் ரூ.23.49 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்ட நியாயவிலைக் கடைகளில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி திறந்து வைத்தார்.
இவ்விழாவிற்கு மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினரும், ஒன்றிய செயலாளருமான ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம் தலைமை தாங்கினார். சி.என்.அண்ணாதுரை எம்பி, துணைப்பதிவாளர் (பொது விநியோக திட்டம்) பி.ஏ.ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு சார்பதிவாளர் (பொது விநியோக திட்டம்) கோகிலா அனைவரையும் வரவேற்றார்.
இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி நியாயவிலைக் கலந்து கொண்டு புதிய கட்டடங்களை திறந்து வைத்து 569 குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவு பொருட்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்த விழாவில் கீழ்பென்னாத்தூர் ஒன்றியக்குழு தலைவர் பூ.அய்யாகண்ணு, ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், ஆணையாளர் விஜயலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.) ரவிசந்திரன், கூட்டுறவு சார்பதிவாளர் சரவணன், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க செயலாளர்கள் குணசேகரன், கே.ஏழுமலை, அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
படவிளக்கம்
கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஆராஞ்சி, குமரக்குடி கிராமத்தில் புதியதாக கட்டப்பட்ட நியாய விலைக் கடையினை தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அருகில் சி.என்.அண்ணாதுரை எம்பி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம் துணை பதிவாளர் (பொது விநியோக திட்டம்) பி.ஏ.ராஜசேகரன் ஆகியோர் உள்ளனர்.
