ஆரணி பட்டுத்தொழிலுக்கு ஜிஎஸ்டி வரிவிலக்கு வேண்டும் என்று ஆரணி எம்.பி. தரணிவேந்தன் மக்களவையில் கோரிக்கை விடுத்துளளார்.
டெல்லி பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வருகிறது. இந்த அமர்வில் பூஜ்ஜிய நேரத்தில் ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் ஆரணியில் பட்டு சேலை நெசவு மற்றும் ஆரணி அரிசி ஆலை பற்றிய முக்கியமான கேள்விகளை முன் வைத்தார்.
டெல்லி பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதில் இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பூஜை நேரத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கேள்விகளை அதிமுக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளை கேட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பூஜ்ஜிய நேரம் ஒதுக்கப்பட்ட ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன் முக்கிய கேள்விகளை எழுப்பினார்.
பெரிய ஆரணி என்று அழைக்கப்படும் ஆரணி இந்தியாவில் தமிழ்நாட்டின், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு முக்கிய வணிக தொழில் துறை மற்றும் கலாசார மையமாகவும், ஒரு பிரதேச தலைமையாகவும் உள்ளது. மற்றும் விவசாய தொழில்களுக்கு தாயகமாக விளங்கி வருகிறது. இந்த ஆரணி நகரம் பெரும்பாலும் பட்டு நகரம் என்று செல்ல பெயர் பெற்று உள்ளது. ஆரணி முழுவதும் அரிசி உற்பத்தி மற்றும் பட்டு சேலை நெசவு மூலம் மிக முக்கிய வருவாய் ஈட்டப்படுகிறது.
நெல் உற்பத்தி மற்றும் ஆரணி பொன்னி என்று அழைக்கப்படும் அரிசியை உற்பத்தி செய்ய 300க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் ஆரணி பகுதிகள் பல்வேறு இடங்களில் உள்ளன. அதேபோல பட்டு சேலைகள் தயாரிப்பதிலே நிபுணத்துவம் பெற்ற பட்டு நெசவாளர்களின் பெரிய சமூகங்களும் இந்த நகரத்தில் உள்ளனர். கைத்தறி மட்டுமே நெசவுக்கு பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும் சமீபத்தில் சிலர் விசைத்தறிகள் போன்ற இயந்திரமயமாக்கப்பட்ட முறைகளுக்கு மாறிவிட்டனர்
திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிக வருவாய் ஈட்டும் நகரம் ஆரணி தமிழ்நாட்டிற்கு வெளியே இந்த நகரம் அதிகம் அறியப்படவில்லை என்றாலும் இந்தியாவின் பட்டு ஆடைகள் பெரும்பகுதி ஆரணி மக்களால் தயாரிக்கப்படுகிறது.
இந்த ஆரணி நகரம் அதன் பட்டு நெசவத் தொழிலுக்கு பெயர் பெற்றது. மேலும் ஆரணிப் பட்டு, காஞ்சிபுரம் பட்டு போலவே பிரபலமானது. ஜிஎஸ்டி வருவதற்கு முன்பு கைத்தறி நெசவுக்கான அத்தியாவசிய மூலப் பொருள்களான வெற்று முறுக்கப்பட்ட பட்டு நூல் ஜரிகை மற்றும் சாயமிடும் பொருட்கள் வரி விலக்கு அல்லது குறைந்த வரி விகிதங்கள் கிடைத்தன.
ஆனால் இப்பொழுது பட்டு நூல் மற்றும் ஜரிகை போன்ற மூலப்பொருட்கள் வாங்குவதற்கு ஒவ்வொன்றுக்கும் ஐந்து சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது
மேலும் பட்டு முருக்குவதற்கும் சாயம் இடுவதற்கும் தனித்தனியாக வரி உள்ளது. இறுதி தயாரிப்புக்கு மேலும் ஐந்து சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இதன் விளைவாக சேலை விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன இதனால் விற்பனை சரிந்துள்ளது.
இந்த சரிவு வணிக உரிமையாளர்களை பாதித்துளளது. அவர்கள் சுமையை நெசவாளர்களுக்கு வழங்கினர். இது பல ஆண்டுகளாக ஊதியம் தேக்கமடைய வழிவகுத்துள்ளது.
இப்போதெல்லாம் நெசவுத் தொழில் மெதுவாக மறைந்து வருவதால் யாருக்கும் நெசவுக் குடும்பத்தில் திருமணம் செய்து கொள்ள விரும்புவது இல்லை. கைத்தறி நெசவு நீண்ட காலமாக தூய்மையான பட்டுச் சேலைகளை உருவாக்குவதற்கான பாரம்பரிய முறையாக மதிக்கப்பட்டு வந்தாலும் மூலப் பொருள்களின் மீது ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டதால், நெசவாளர்கள் தரத்தின் மீது சமரசம் செய்ய கட்டாயப்படுத்தி உள்ளது
வெள்ளம் மற்றும் வறட்சி மிகுந்த காலங்களில் விவசாயிகள் நிவாரணம் பெறும் அதே வேளையில் மழைக்காலத்தில் நூல்கள் தொடர்ந்து நெசவு செய்வதில் சிக்கிக் கொள்கின்ற சிரமம் ஏற்படுகின்றது. அதை தாங்கிக் கொள்ளும் அவர்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்காது. இதனால் இந்த செயல்முறைகள் மிகப்பெரிய சவால்களை ஏற்படுத்துகிறது.
எனவே, வரும் ஆண்டுகளில் சந்தைப்படுத்துகின்ற பட்டுகளுக்கான ஜிஎஸ்டியை வரி விகிதத்தை குறைக்கவோ அல்லது பட்டு நெசவுக்கு வரி விலக்கோ அளிக்கப்படவேண்டும். அப்படி என்றால் மட்டுமே ஆரணி பட்டுத் தொழிலை காப்பாற்ற முடியும் என்று எம்.பி. தரணிவேந்தன் கோரிக்கை வைத்துள்ளார்.