இந்தியாவில் 80 கோடி பேருக்கு இலவச உணவு வழங்குவதாக பிரதமர் மோடி கூறுவது பெருமைக்குறிய விஷயம் இல்லை. உண்மையில் வேதனைக்குரிய விஷயம்.
கடந்த லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடியின் முக்கிய பிரசாரமே ‘நாங்கள் (அதாவது மத்திய அரசு) நாட்டில் 80 கோடிப்பேருக்கு இலவச உணவு வழங்கி வருகிறோம். இந்த திட்டத்தை வரும் ஆட்சி முழுக்க நீடிப்போம்’ என கூறியிருந்தார். அது கூட பரவாயில்லை… மூன்றாவது முறையாக பொறுப்பேற்றதும், இந்தியாவில் ரேஷன் கடைகள் மூலம் 80 கோடிப்பேருக்கு மத்திய அரசு இலவச உணவு வழங்கி வருகிறது.
இதனை நாங்கள் 10 ஆண்டுகளாக செய்து வருகிறோம் என்பதை தனது கடந்த கால சாதனையாகவும், எதிர்கால சாதனையாகவும் கூறியிருந்தார்.
கைதட்டி மகிழ்ச்சி?
மோடியின் இந்த பேச்சை உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மட்டுமின்றி, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் கூட பெரிய அளவில் கை தட்டி வரவேற்று ஆர்ப்பரித்தனர்.
பிரதமரின் இந்த சாதனை பற்றி மிகப்பெரிய அளவில் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து மகிழ்ந்தனர். யோகி ஆதித்யநாத் ஒரு படி மேலே போய், பல உலக வல்லரசு நாடுகளின் ஒட்டுமொத்த மக்கள் தொகையை விட அதிகம் பேருக்கு இந்தியா பல ஆண்டுகளாக இலவச உணவு வழங்கி வருகிறது எனவும் கூறியிருந்தார்.
இந்தியாவில் எத்தனை எதிர்க்கட்சிகள் உள்ளன.
அதாவது பா.ஜ.க., தவிர்த்து மற்ற எத்தனை கட்சிகள் உள்ளன. தி.மு.க., உட்பட எந்த கட்சியும் இது சாதனை இல்லை. மத்திய அரசு நிர்வாக ரீதியாக தோல்வியை சந்தித்துள்ளது என்பதற்கான வேதனையான சான்று என்பதை சுட்டிக்காட்டவும் இல்லை. அந்த அளவு தான் இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு புரிதல் இருக்கிறது போல் தெரிகிறது. இப்படிப்பட்ட புரிதல் இல்லாத கட்சிகள் இருப்பதால் தான் பா.ஜ.க., மத்தியில் பெரிய அளவில் ஆளுமை செலுத்துகிறது.
சாப்பாட்டிற்கு அரசை எதிர்பார்க்கும் மக்கள்
உண்மை தான். இந்தியா சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகள் ஆகி விட்டது. இத்தனை ஆண்டுகளில் நாட்டின் மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கினரை சாப்பாட்டிற்காக அரசை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் வைத்திருக்கிறோம். அரசு வழங்கும் இலவச அரிசி, பருப்பு, எண்ணெய் வாங்கி சாப்பிடும் நிலையில் வைத்திருக்கிறோம் என்பதை இவர்கள் யாரும் புரிந்து கொள்ளவில்லை.
இது தான் மிகவும் வேதனையான விஷயம். ஏழைகள் இல்லாத நாடுகளே உலகில் இல்லை. குறிப்பாக வல்லரசு நாடுகளில் கூட ஏழைகளும், பிச்சைக்காரர்களும் உள்ளனர். அங்குள்ள சிலரும் உணவுக்கு தவித்து வருகின்றனர்.
ஆனால் அந்த நாடுகளில் உள்ள ஏழைகள், பிச்சைக்காரர்கள், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளோரின் எண்ணிக்கையை விட, இந்தியாவில் உள்ள ஏழைகள், பிச்சைக்காரர்கள், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளோரின் எண்ணிக்கை மிக, மிக அதிகம். அதாவது 145 கோடி மக்கள் தொகையில், அரசு கணக்குப்படி இலவச உணவு சாப்பிடும் மக்களின் எண்ணிக்கை 80 கோடி.
சாதனையா..? வேதனையா?
அப்படியானால் சாப்பாட்டுக்கு அரசாங்கத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் மக்களின் எண்ணிக்கை ஒட்டு மொத்த மக்கள் தொகையில் சரிபாதியை விட அதிகம் உள்ளது என்பதை பார்த்தால் தலை சுற்றுகிறது.
உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரா நாடாக உருவெடுத்து வரும் இந்தியாவில் இன்னும் இவ்வளவு பேர் தங்களது சாப்பாட்டுக்கு கூட சம்பாதிக்க வழியின்றி, அரசாங்கத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது மத்திய, மாநில அரசுகளின் சாதனையா? வேதனையா?.
இது பற்றி நாட்டை ஆளும் அரசியல்வாதிகள், இதனை தங்களின் சாதனையாக பேசுவதும், அதனை தட்டிக்கேட்காமல் எதிர்கட்சிகள் மௌனம் சாதிப்பது எந்த வகையில் நியாயமோ தெரியவில்லை.
இது மத்திய அரசின் அவலம் என்றால்… மாநில அரசுகள் செய்வது நியாயமா? என கேட்காதீர்கள்.
தமிழ்நாடு அரசு குடும்பத்திற்கு தரும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகையினை பல வசதியானவர்கள் கூட வாங்குகின்றனர். இதே பார்முலா கர்நாடகா, ஆந்திராவிலும் உள்ளது. டெல்லியில் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 2500 ரூபாய் வழங்க தற்போது அரசு உத்தரவிட்டுள்ளது. பணம் கொடுப்பது வேறு, உணவு கொடுப்பது வேறு.
எல்லோருக்கும் பணத்தேவை உண்டு
இந்தியாவில் அதானி, அம்பானி முதல், சாதாரண மனிதர்கள் வரை பணத்தேவை இல்லாதவர்களே இல்லை. எத்தனை லட்சம் கோடி சொத்துக்கள் இருந்தாலும், மேலும், மேலும் சம்பாதிக்க உழைப்பவர்களும் இருக்கத்தானே செய்கின்றனர்?!
இலவமாக பணம் வாங்க பல கோடீஸ்வரர்களும் தயாராகவே உள்ளனர். இதனால் அரசு வழங்கும் ஆயிரம் ரூபாயினை வாங்கி குடும்பம் நடத்தும் வறுமை நிலையிலா இத்தனை கோடி குடும்பங்கள் உள்ளன என வாதிடுவது பொருந்தாது. பணத்திற்காக காத்திருப்பது வேறு… சாப்பாட்டுக்காக காத்திருப்பது வேறு.
இரண்டையும் ஒரே அளவீட்டில் கொண்டு வர முடியாது. இதனால் இலவசமாக உணவு வழங்குகிறோம் என இனிமேல் பெருமை பேசாதீர்கள் அரசியல்வாதிகளே.!
சாதகமான சூழலை உருவாக்குங்கள் ; சாதனையாக மாற்றுங்கள்!
சாப்பாட்டிற்காக அரசாங்கத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மக்கள் அனைவரது குடும்பங்களிலும் நல்ல வருவாய் வரும் அளவுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி, அவர்கள் சுயமாக வாழும் சூழலை உருவாக்குங்கள். நாட்டில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கு இடையேயான இடைவெளி வெகு வேகமாக அதிகரித்து வருகிறது.
பணக்காரர்கள் ஆயிரம், லட்சம் கோடிகளில் புரள்கின்றனர். உங்கள் கணக்குப்படி 80 கோடிப்பேர் சாப்பாட்டிற்கு வழியின்றி தவிக்கின்றனர். இந்த நிலையை மாற்றி முடிந்த அளவு சிறு, குறு தொழில்களை வளர்க்கும் விதமாக திட்டங்களை மாற்றி, எல்லோரும் தொழில் செய்யும் வாய்ப்புகளை உருவாக்கி… எல்லோருக்கும் வேலை கிடைக்கும் வாய்ப்புகளையும் உருவாக்கித் தாருங்கள். அதுதான் ஆட்சியின் சாதனை. வீண் ஜம்பம் பேசுவது அல்ல சாதனை. செய்து காட்டுவது தான் சாதனை!செய்து காட்டுவது முதல் படிகள். சிறுதொழில்களை வளர்க்கும் விதமாக உங்கள் கடின வேலையை பெருகின்றனர். அந்த நாளில் உங்கல் வாய்ந்த டிசிப்ளின் மூலம் உங்கள் சோம்பேறி மேம்படுத்த அமைதி கொண்டு செயல்களை முயற்சி செய்யலாம். அதையும் வேலையை வரைத்து மிகவும் பெருகின்றனர். எனவே, செய்து காட்டுவது முடிகின்ற குறுசொல் அல்ல, உயிரிழந்த படைவாக கொள்கிறது!