புதிய வரி விதிப்பில் இந்தியாவுக்கு விலக்கு இல்லை என்பதை பிரதமர் மோடியிடம் தெளிவுபடுத்தி விட்டேன் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
புதிய வரி விதிப்பு முறையில் இந்தியாவுக்கு விலக்கு அளிக்க முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் நான் தெளிவுபடுத்தி இருக்கிறேன். இந்த விஷயத்தில் யாரும் என்னிடம் விவாதம் நடத்த முடியாது.
மற்ற நாடுகள் அவர்களுடைய சந்தைகளில் இருந்து அமெரிக்காவை விலக்கி வைக்க பணமற்ற கட்டணங்களை (non-monetary tariffs) செயல்படுத்தினால், நமது சந்தைகளில் இருந்து அந்த நாடுகளை தள்ளி வைக்க பணமற்ற தடைகளை உருவாக்குவோம். இவ்வாறு அதிபர் ட்ரம்ப் பேசினார்
அதிபர் ட்ரம்பின் இந்த அறிவிப்பு வர்த்தக உலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் ஏப்ரல் 2-ம் தேதிக்கு பிறகு அமெரிக்காவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு வரி விதிப்பு அதிகரிக்கும். இதன்மூலம் வர்த்தகம் பாதிக்கும் நிலை உருவாகி உள்ளது.
இந்தியாவை விட சீனா, கனடா மற்றும் ஐரோப்பிய, ஆசிய நாடுகள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளன. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சீனா, ‘வரிப்போர், வர்த்க போர், நேரடி போர் எதுவாக இருந்தாலும், கடைசி நிமிடம் வரை மோதிப்பார்ப்போம்’ என சவால் விட்டுள்ளதை உலகம் கவலையுடன் கவனித்து வருகிறது.