தனியார் மருத்துவமனைகளில் அதிகவிலைக்கு விற்கப்படும் மருந்துகள் குறித்த விவகாரத்தில் மாநில அரசுகள் கொள்கை முடிவு எடுக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தனியார் மருத்துவமனைகளில் செயல்படும் மருந்தகங்களில் அதிக விலைக்கு மருந்துகள் விற்பனை செய்யப்படும் விவகாரத்தில் மாநில அரசுகள் கொள்கை முடிவை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தனியார் மருத்துவமனைகளில் செயல்படும் மருந்தகங்களில் அதிக விலைக்கு மருந்துகள் விற்பனை செய்யப்படும் விவகாரத்தில் மாநில அரசுகள் கொள்கை முடிவை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பான பொதுநல மனு, உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தனியார் மருத்துவமனைகளில் உள்ள மருந்தகங்களில் வெளிச்சந்தையைவிட அதிக விலை கொடுத்து வாங்க, நோயாளிகளின் உறவினர்கள் கட்டாயப்படுத்தப்படுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மருத்துவமனையைவிட்டு வெளியில், குறைந்த விலைக்கு மருந்துகளை வாங்கிவர தனியார் மருத்துவமனைகள் அனுமதிப்பதில்லை எனவும் குற்றம்சாட்டப்பட்டது. அதிக விலைக்கு மருந்துகள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க உரிய கொள்கை முடிவை எடுப்பது குறித்து அனைத்து மாநில அரசுகளும் பரிசீலிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.