கோயில் வளாகத்தில் பக்திப் பாடல்கள் மட்டுமே பாடப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
கோயில் திருவிழாக்களின் போது இசைக்கச்சேரி நடப்பது வழக்கம். சில இடங்களில் பக்தி பாடல்களுடன் சினிமாப் பாடல்கள் உள்ளிட்டவை பாடப்பட்டு வந்தன,
இந்த நிலையில், புதுச்சேரி வரதராஜ பெருமாள் கோயிலில் நடந்த இசைக்கச்சேரியில் பக்தி பாடல்களைத் தவிர சினிமா பாடல்கள்தான் அதிகம் பாடப்பட்டதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கியிலில் நடக்கும் இசைக் கச்சேரிகளில் சினிமாப் பாடல்களை பாட தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ‘ கோயில் வளாகத்திற்குள் இசைக்கச்சேரி நடத்தும் போது பக்திப் பாடல்கள் மட்டுமே பாடப்பட வேண்டும். சினிமாப் பாடல்கள் பாட அனுமதி கிடையாது.’ என்று உத்தரவிட்டுள்ளது.