செங்கல்பட்டு அருகே ஓடும் பள்ளி பேருந்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், பாலூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படிக்கும் 5 வயது பள்ளி மாணவி வடக்குப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்.
இவர் நேற்று முன்தினம் மாலை பள்ளி பேருந்தில் வீட்டிற்கு சென்ற போது, பள்ளி பேருந்தின் கிளீனர் முருகன் (50) என்பவர் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
இதில் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பாலியல் தொல்லை கொடுத்த பாலூர் மாதா கோவில் தெருவைச் சேர்ந்த முருகனைப் பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.