மத்திய, மாநில அரசுகளை விமர்சித்து #GETOUT என்கிற ஹேஷ்டேக் உடன் இடம்பெற்ற பேனரில் 6 விமர்சனங்களை முன்வைத்து விஜய் கையெழுத்து இட்டார்.
தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி ஒரு ஆண்டு நிறைவடைந்து இரண்டாம் ஆண்டில் நுழைவதை கொண்டாடும் விதமாக ஆண்டு விழா நிகழ்ச்சி மாமல்லபுரம் அருகே ஈசிஆர் சாலையில் உள்ள நட்சத்திர ரிசார்டில் தொடங்கியது. விழாவில், விஜயுடன் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், ஆதவ் அர்ஜுனா, என்.ஆனந்த் ஆகியோரும் மேடையில் இடம்பெற்றனர். முதலில் பாடகி மாரியம்மாள் இசைக்குழுவினரின் கச்சேரியுடன் நிகழ்ச்சி தொடங்கியது.
முன்னதாக, விழாவில் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. மத்திய, மாநில அரசுகளை விமர்சித்து #GETOUT என்கிற ஹேஷ்டேக் உடன் இடம்பெற்ற பேனரில் 6 விமர்சனங்கள் வைக்கப்பட்டன. தவெக தலைவர் விஜய் கையெழுத்திட்டு ஆரம்பித்து வைத்தார். அதை தொடர்ந்து என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா கையெழுத்திட பிரசாந்த் கிஷோர் கையெழுத்திட மறுப்பு தெரிவித்தார்.
இதை தொடர்ந்து என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, பிரசாந்த் கிஷோர் மேடையில் பேசினார். இவர்களை தொடர்ந்து தவெக தலைவர் விஜய் பேச வந்த போது நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் ஆரவாரத்தால் அரங்கமே அதிர்ந்தது.
என் நெஞ்சில் குடியிருக்கும் என்று பேச்சை தொடங்கிய விஜய், அரசியல் வேற லெவல இருக்குல. எப்ப யார் எதிர்பார்கள், யார் ஆதரிப்பார்கள் என்று தெரியாது. மக்களுக்கு பிடித்தவர்கள் அரசியலுக்கு வந்தால் அவர்களை மக்கள் வரவேற்பார்கள் தான். அது சிலருக்கு மட்டும் எரிச்சலாக தான் இருக்கும்.
அத எதிர்க்க வரவன் போறவன்லாம் கட்சி ஆரம்பிறக்காறங்கன்னு சொல்ல தான் செய்வாங்க. பண்ணையார்கள் தான் கடந்த காலங்களில் பதவியில் இருப்பார்கள். தற்போது பதவியில் இருப்பவர்கள் பண்ணையார்களா மாறி விடுகிறார்கள் என்று தெரிவித்தார்.
விரைவில் பூத் கமிட்டி மாநாடு நடத்தபோறோம். அன்னைக்கு தெரியும் தவெக எந்த கட்சிக்கும் சலைத்த்து கிடையாதுன்னு. புதுசா ஒரு பிரச்சனைய கிளப்பி விடுறாங்க. அது தான் மும்மொழி கொள்கை. எல்.கே.ஜி படிக்கிற பசங்க மாதிரி சண்ட போட்டுக்கிட்டு இருக்காங்க. கொடுக்க வேண்டியது அவங்க கடமை, வாங்க வேண்டியது நமது உரிமை. இத செய்யாம சோசியல் மீடியாவில் ஹேஸ்டேக் போட்டு விளையாடிக்கிட்டு இருக்காங்க. இரண்டு கட்சியும் பேசி வைத்துக்கொண்டு மாறி மாறி சமுகவலைத்தளத்தில் விளையாடி வருகிறார்கள் என்றும் தெரிவித்தார்.