திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் துர்க்கையம்மன் கோவில் தெரு செய்யாற்றங்கரையில், இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பழமை வாய்ந்த காளியம்மன் கோயிலுகு சொந்தமான இடத்தை பல ஆண்டுகாலமாக ஆக்கிரமிப்பு செய்து சீமை ஓடு அமைத்து வீடு கட்டி குடியிருந்து வருபவருக்கு வீட்டை காலி செய்து, ஒப்படைக்குமாறு இந்து சமய அறநிலைத்துறை நிர்வாகத்தினர் பலமுறை உத்தரவு நகல் மூலம் தெரிவித்தனர்.
ஆனால் அதில் வசிப்பவர் அந்த உத்தரவை சிறிதும் செவி சாய்க்காமல் அலட்சியம் காட்டியதால், இந்து சமய அறநிலைத்துறை மாவட்ட உதவி ஆணையர் ஜோதிலட்சுமி தலைமையில் இந்து சமய அறநிலைத்துறை வட்டாட்சியர் முருகன், துணை வட்டாட்சியர் திருநாவுக்கரசு, திருக்கோவில்கள் செயல் அலுவலர் தேன்மொழி, கோவில் ஆய்வாளர்கள் சத்யா ஆகியோர் முன்னிலையில், பணியாளர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் வீட்டை இடித்து அகற்றினர்.