டெல்லியில் இன்று நடைபெறும் திமுக போராட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
பல்கலைக்கழக மானியக்குழுவின் (யுஜிசி) புதிய விதிகளுக்கு எதிராக திமுக மாணவர் அணி சார்பில் டெல்லியில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளதாக திமுக மாணவரணிச் செயலாளர் எழிலரசன் தெரிவித்துள்ளார்.