இசையமைப்பாளரும் பாடகருமான அனிருத் பாடிய ‘விடாமுயற்சி’ படத்தின் பாடல் இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த படம் கடந்த ஆண்டு வெளியாகயிருந்த நிலையில், நாடுமுழுவதும் இன்று வெளியாகிறது.
இதற்கான முதல் காட்சியை தமிழகத்தில் ஒன்பது மணி முதல் திரையிடப்படுகிறது. படத்தின் இடம்பெறும் தனியே என்ற பாடலை நேற்று வெளியிட்டுள்ளனர்.
இதை பாடல் ஆசிரியர் மோகன் ராஜன் எழுதி அனிருத் இசையமைத்துள்ளார். இந்த பாடல் மனைவியை பிரிந்த சோகத்தில் கணவனின் பார்வையில் எழுதப்பட்டுள்ளது.
இந்த பாடல் தற்போது இணையதளத்தில் வைரலாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.