புதிய மாவட்ட ஆட்சியரின் இரண்டாவது நாள் திடீர் ஆய்வு அதிகாரிகளுக்கு கலக்கத்தையும் பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பையும் ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட புதிய ஆட்சியர் தர்பகராஜ் பதவி ஏற்ற 2-வது நாளான நேற்று அதிகாலை 6.30 மணிக்கு திடீரென மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆணையர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளோடு மாநகராட்சி அன்றாட நிகழ்வுகள் குறித்து கேட்டறிந்ததார்.
அதனைத் தொடர்ந்து மாநகராட்சி பின்புறம் அமைந்துள்ள தமிழக முதல்வரின் காலை உணவு திட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தயாரிக்கும் சமையல் கூடத்தை ஆட்சியர் தர்ப்பகராஜட பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து சமைக்கப்பட்ட காலை உணவினை சாப்பிட்டு ருரி பார்த்தார். மேலும் மாணவர்களுக்கு உணவு தயாரிக்கும் போது காய்கறிகளை கூடுதலாக சேர்க்கும்படி பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
திருவண்ணாமலை 10-வது வார்டில் வானகரம் பாளையம் தெரு, வளையல் கார தெரு உள்ளிட்டா பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு ஆட்சியர் நேரடியாக சென்ற புதிய மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் வீடுகளில் தினந்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.
அப்பகுதி மக்கள் தினம்தோறும் காலையில் மாநகராட்சி பணியாளர்கள் குப்பைகளை முறையாக வாங்கி செல்வதாகவும், சாலைகளில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதாகவும், இதனால் சிறுவர்கள் வயதானவர்களுக்கு மிகவும் சிரமமாக இருப்பதாகவும், அவற்றை மாநகராட்சி மூலம் பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் பணியாளர்கள் அனைத்து வீடுகளுக்கும் சென்று விசில் அடித்து குப்பைகளை வாங்கவும் வேண்டும் என்று அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.
திருவண்ணாமலை மாநகராட்சி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட புதிய மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் மாநகராட்சிக்கு பின்புறம் அமைந்துள்ள திடக்கழிவு மேலாண்மை இடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள டவுன் ஹால் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் காலை உணவு திட்டத்தில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உணவு குறித்தும், பள்ளி மாணவர்களிடம் உங்களுக்கு எவ்வாறு தினமும் உணவு பரிமாறப்படுகிறது. அவர்களே கொண்டு வந்து பரிமாறுகிறார்களா அல்ல நீங்கள் சென்று வாங்குகிறீர்களா என கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.
மாநகராட்சி பின்புறம் அமைந்துள்ள நூன் உர மையத்தில் திருவண்ணாமலை மாநகராட்சி நான்கு வார்டுகளில் சுமார் 2802 வீடுகளில் இருந்து மாதந்தோறும் 30 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு அதனை பத்து டன் இயற்கை உரமாக மாற்றி விவசாயிகளுக்கு ஒரு ரூபாய்க்கு விற்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.
மேலும் அங்கு பணிபுரியும் பணியாளர்களிடம் தினந்தோறும் செய்யும் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து குப்பைகளை பெறுவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
அந்த பகுதியில் 18 பள்ளிகளுக்கு சுமார் 1426 மாணவ மாணவிகளுக்கு காலை உணவு திட்டத்தின் மூலம் உணவு தயார் செய்யப்பட்டு பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக சமையல் பணியாளர்கள் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் பேசியபோது கூறியதாவது:-
திருவண்ணாமலை ஆன்மிக கோயில் நகரம் என்பதால், திடக்கழிவு மேலாண்மை குறித்து திருவண்ணாமலை மாநகராட்சியில் ஆய்வு செய்ய வந்ததாக தெரிவித்தார். மேலும் திடக்கழிவு மேலாண்மையை மிகவும் சிறப்பாக மேம்படுத்தும் வகையில் வருங்காலங்களில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் அது குறித்த சில சிறப்பான நடவடிக்கைகளை எடுக்க கலந்து ஆலோசிக்கப்பட்டு இருப்பதாகவும், மாநகராட்சியின் கீழ் செயல்படக்கூடிய 18 பள்ளிகளின் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு வருவது குறித்தும் சமையலறையும் சமைக்கப்படும் உணவு குறித்தும் ஆய்வு செய்ததாகவும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து ஈசானிய மைதானத்தில் திருவண்ணாமலை மாநகராட்சியில் இருந்து சேகரிக்கப்படும் குப்பை கிடங்கையும் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.