நாசா சார்பில் சர்வதேச விண்வெளி மையத்துக்கு செல்லும் ஆக்சியம் 4 தனியார் திட்டத்தின் பைலட் ஆக சுபான்சு சுக்லா செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தில் இந்திய விண்வெளி ஆய்வு மையம் ஈடுபட்டுள்ளது. இதற்கு முன் சோவியத் யூனியன், அமெரிக்கா மற்றும் சீனா மட்டுமே விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பியுள்ளன.
இந்நிலையில், விண்வெளிக்கு விமானப்படையைச் சேர்ந்த குரூப் கேப்டன்கள் பிரசாந்த் நாயர், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப் மற்றும் விங் கமாண்டர் சுபான்சு சுக்லா ஆகியோர் செல்ல உள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்த வருகிறது.
இந்நிலையில், இந்திய விமானப்படை வீரரும், இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தில் விண்வெளி செல்வதற்கு தேர்வு செய்யப்பட்டவருமான சுபான்சு சுக்லா, நாசா சார்பில் சர்வதேச விண்வெளி மையத்துக்கு செல்லும் ஆக்சியம் 4 தனியார் திட்டத்தின் பைலட் ஆக செயல்படுவார் என்று அறிவிக்கபட்டுள்ளது.
சுபான்சு சுக்லா யார்?
உத்தரபிரதேசத்தின் லக்னோவை சேர்ந்தவர் 39 வயதான குரூப் கேப்டன் சுபான்சு சுக்லா.
2006ம் ஆண்டு இந்திய விமானப்படையில் பணியில் சேர்ந்தார். இவருக்கு 2,000 மணிநேரம் வானில் பறந்த அனுபவம் உள்ளவர்.
சுக்லா இந்திய விமானப்படையின் விமானங்களான Sukhoi-30 MKI, MiG-21S, MiG-29S, Jaguar, Hawks Dorniers மற்றும் N-32 போன்றவற்றை இயக்கி உள்ளார்.
1984ம் ஆண்டு முதல் விண்வெளிக்குச் செல்லும் இந்தியாவின் இரண்டாவது விண்வெளி வீரராக சுபான்சு சுக்லா இருப்பார்.