திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளை பாராட்டி மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.
கன்னியாகுமரியில் அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவி 25 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு வெள்ளி விழா கொண்டாடும் வகையில் கடலூர் மாவட்ட மைய நூலகத்தில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.
இதில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளை பாராட்டி மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்ததாவது:
கன்னியாகுமரியில் அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு வெள்ளி விழா கொண்டாட முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி, கடலூர் மாவட்டத்தில் பொது நூலகத் துறையின் சார்பில் கடலூர் மாவட்ட மைய நூலகத்தில் 23.12.2024 முதல் 31.12.2024 வரை பள்ளி மாணவ, மாணவிகளுக்கான திருக்குறள் ஒப்புவித்தல், வினாடி- வினா மற்றும் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டது.
வினாடி-வினா. திருக்குறள் ஒப்புவித்தல் மற்றும் பேச்சுப் போட்டி ஆகிய போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற 15 மாணவ / மாணவிகளுக்கு, முதல் பரிசு ரூ.5,000, இரண்டாம் பரிசு ரூ.3,000, மூன்றாம் பரிசு ரூ.2,000 வீதம் ரொக்கப் பரிசும் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட நூலக அலுவலர் சக்திவேல், அரிமா பாஸ்கரன் முனைவர் ஜானகிராஜா, பிஎஸ்என்எல் பால்கி மற்றும் தமிழ் ஆர்வலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், பள்ளி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.