ராணிப்பேட்டை சிப்காட் அடுத்த லாலாபேட்டை பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி சுரேஷ் லோடு மேனாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி அமராவதியும் அதே பகுதியில் தனியார் தொழிற்சாலையில் கூலி வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 18-ம் தேதி, அமராவதி எப்போதும் தன் நண்பர்களுடன் செல்போனில் பேசிக் கொண்டிருப்பதாக சுரேஷ் கண்டித்துள்ளார். ஆத்திரமடைந்த அமராவதி, தன் கணவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது கொதிக்கும் வெந்நீரை ஊற்றியுள்ளார்.
அலறித்துடித்த சுரேஷின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
கடந்த 5 நாட்களாக தீவிர சிகிச்சையில் இருந்து வந்த சுரேஷ், நேற்று நள்ளிரவு பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அறிந்து வந்த சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.