செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருப்பூரில் இருந்து தனியார் ஆம்புலன்ஸ் வாகனம் நோயாளியை ஏற்றுக்கொண்டு சென்னை நோக்கி
சென்று கொண்டிருந்தது.
அப்போது மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அய்யனார் கோவில் என்ற இடத்தில் சாலையில் கவிழ்ததால் அதில் நோயாளியுடன் வந்த 5 பெண்கள் உள்பட 6 பேர் காயம் அடைந்தனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி சென்னை மார்க்கத்தில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த மதுராந்தகம் காவல்துறையினர் ஆம்புலன்ஸ் வாகனத்தை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.