தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை, கட்சி கட்டமைப்பை மேம்படுத்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஒப்புதலுடன் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து அறிவித்து வருகிறார்.
அந்த வகையில், மாநில தேர்தல் பொறுப்பாளர் எம்.பி, பீட்டர் அல்போன்ஸ் தலைமையில், மேலாண்மைக் கமிட்டியை அமைத்துள்ளார்.
இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களோடு 17 பேர் இடம் பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளுக்கு மூன்று தொகுதிகளுக்கு ஒரு மண்டல ஒருங்கிணைப்பாளர் என்கிற அடிப்படையில் 13 மண்டல ஒருங்கிணைப்பாளர்களை நியமனம் செய்து அறிவித்துள்ளனர்.
மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய மூன்று லோக்சபா தொகுதிகளைக் கொண்ட மண்டலத்திற்கு ஒருங்கிணைப்பாளராக தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த டி.என்.அசோகன் என்பவரை நியமித்து மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். அவருக்கு சேலம் புறநகர் மாவட்ட சிவாஜி மன்ற தலைவர் சிவக்குமார் மாரிமுத்து மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.