கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள மூரார்பாளையம் – ரோடு பரமநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சி இவரது மகன் சரத்குமார் தினந்தோறும் மது குடித்து விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.
இதற்கு இப்படி அடிக்கடி காலை முதல் மாலை வரை குடித்தால் உனக்கு யார் திருமணத்திற்கு பெண் கொடுப்பார்கள் என தந்தை கொளஞ்சி சண்டையிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் சரத்குமார் அடிக்கடி குடும்பத்தினருடனும், தந்தை கொளஞ்சியிடமும் அடிக்கடி வாய் தகராறு மற்றும் கைகலப்பு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சரத்குமார் மது குடித்து விட்டு வீட்டுக்கு சென்றபோது, மறுபடியும் தந்தை மகன் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த தந்தை கொளஞ்சி மகன் சரத்குமாரை விறகு வெட்டும் கொடுவாளால் சரமாரியாக கழுத்து மற்றும் தலை பகுதிகளில் வெட்டியுள்ளார்.
இதில் சரத்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்தார். இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் சரத்குமாரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை, பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து சரத்குமாரின் தாய் பெரியம்மாள் கொடுத்த புகாரின் பேரில், கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சங்கராபுரம் காவல் துறையினர் மகனை சரமாரியாக கொடுவாளால் வெட்டிய தந்தை கொளஞ்சியை தேடி வந்தனர்.
இந்நிலையில் அவர் பெங்களூரில் கிளாஸ் பாளையம் பூ மார்க்கெட்டில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற சங்கராபுரம் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் சங்கராபுரம் பகுதியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.