முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று காலமானார். அவருக்கு வயது 92. அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், மாநகர தலைவர் ஏ.ஆர்.பி.பாஸ்கர் தலைமையில் மன்மோகன் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்வில், வர்த்தக பிரிவு மாநகரத் தலைவர் எம்.டி.சுப்பிரமணியம், முன்னாள் மாநகர மாவட்ட தலைவர் எம்.ஏ.டி.கிருஷ்ணசாமி, துணை மேயர் சாரதாதேவி மாணிக்கம், மாநகரத் துணைத் தலைவர்கள் மொட்டையாண்டி, கோபி குமரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் மெடிக்கல் பிரபு சரவணன், தேசிய ஒருங்கிணைப்பாளர் எஸ்.சி.துறை விஜய ஆனந்த், மாமன்ற உறுப்பினர் கிரிஜா குமரேசன், மாநகர பொதுச் செயலாளர்கள் வழக்கறிஞர் கார்த்தி, லட்சுமண பெருமாள், பங்க் மதன், குமரேசன், விவசாய பிரிவு தலைவர் சிவக்குமார், அமைப்புசாரா வரதராஜு, மண்டல தலைவர்கள் சாந்தமூர்த்தி, நிசார் அகமது, ராமன், நாகராஜ், நடராஜ், மோகன், கந்தசாமி, மாநகர செயலாளர்கள் ரவி, சஞ்சய் காந்தி, ராஜதுரை, அம்மாபேட்டை கோவிந்தன், இளைஞர் காங்கிரஸ் விஜய், ராஜ், ராஜ் பாலாஜி, அரவிந்த், டிவிஷன் தலைவர்கள், ஜானி, பாலு, மோகன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு மன்மோகன் படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.