மருத்துவாம்பாடியில் ரூ.40 லட்சம் மதிப்பிலான புதிய தார் சாலை பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு, ஊராட்சி ஒன்றியம் மருத்துவம்பாடி, கிராமத்தில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மருத்துவம்பாடி, முதல் பள்ளகாலணி, வரை புதிய தார் சாலை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.
விழாவிற்கு ஒன்றிய குழு தலைவர் ராணி அர்ஜுனன் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு துணை தலைவர் முருகையன், வட்டார அத்மா திட்ட குழு தலைவர் மணிமாறன், சேத்துப்பட்டு கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் எழில்மாறன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேலு, வெங்கடேசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் ஊராட்சி மன்ற தலைவர் உமாவெங்கடேசன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர்களாக ஆரணி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன், திமுக மாநில மருத்துவ அணி துணை தலைவர் எ.வ.வே.கம்பன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய தார் சாலை அமைக்க பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி தலைவர் மணிகண்டன், ஒன்றிய செயலாளர் மனோகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பாண்டுரங்கன், எதிரொலி மணியன்,சேத்துப்பட்டு, நகர திமுக செயலாளர் முருகன், வர்த்தக அணி அமைப்பாளர் செல்வராஜன், மாவட்ட இலக்கிய அணி பொறுப்பாளர் ஏழுமலை, பேரூராட்சி மன்ற உறுப்பினர் சரவணன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, திமுக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.