சின்னசேலம் அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள ராயர்பாளையம் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் முறையாக வேலை வழங்கவில்லை எனக்கூறி 1 மற்றும் 2வது வார்டு மக்கள் சுமார் 40க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பிடிஓ, சின்னசேலம் காவல் ஆய்வாளர் ஏழுமலை ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடையே முறையான வேலைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதனையடுத்து, பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.