விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வனச்சரக எல்லைக்குட்பட்ட கீழ் கூடலூர் பகுதியில் நெற்கழனியின் நடுவில் ஒரு கொட்டகை அமைத்து தொடர்ச்சியாக பறவைகள் மற்றும் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் திண்டிவனம் வனச்சரக பணியாளர்கள் நேற்று மாலை சம்பவ இடத்திற்கு நேரில் சென்று அவர்களை சுற்றி வளைத்தனர். அப்பொழுது அந்த கொட்டகைக்குள் மூன்று பேர் மாமிசம் சமைத்துக் கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரணை செய்ததில் அது பறவைகளின் மாமிசம் என தெரியவந்தது.
மேலும் அப்பகுதியை சோதனை செய்ததில், 28 அவுட் காய்கள், மாமிசத்தை பதப்படுத்தும் குளிர்சாதன பெட்டி, சுமார் 8 முதல் 10 கிலோ அளவிற்கான கன்னி வைக்க பயன்படுத்தும் சுருக்கு கம்பி, இரண்டு பைக்குகள், விலங்குகளின் ரோமங்களை நீக்க பயன்படுத்தும் கேஸ் டார்ச், கத்தி, டார்ச் லைட் ஆகியன கைப்பற்றப்பட்டன.இது தொடர்பாக திண்டிவனம் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த நரிக்குறவர் இனத்தை சேர்ந்த துரைக்கண்ணு என்பவரது மகன்களான பிரகாஷ் (29), ஜெமினி (22), தமிழரசன் (20) ஆகிய மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.