திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் பெரியகாலனி பகுதியில் உள்ள ஆர் சி எம் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து சமூகநலம் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சியை ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பிறந்த குழந்தை முதல் ஆறு மாதமான குழந்தைகள் வரை எடை, வளர்ச்சி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள 87 குழந்தைகளில் முதல் கட்டமாக 11 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து அடங்கிய பெட்டகம் வழங்கும் தொடக்க நிகழ்ச்சியில் ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளர் தயாளன்,வந்தவாசி நகர மன்ற தலைவர் ஜலால், துணைத் தலைவர் சீனிவாசன், திமுக நகர அவைதலைவர் நவாப்ஜான், பொருளாளர் ராஜாபாஷா, முன்னாள் நகர செயலாளர் அன்சாரி,நகரமன்ற உறுப்பினர் ரிகானா சையத்அப்துல்கறீம், குடியரசு,ஆதிமூலம், செந்தில், வெங்கடேசன், கோரை பாய் வியாபாரிகள் சங்கம் சாதிக்பாஷா,வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் அபிராமி, மேற்பார்வையாளர்கள் செண்பகவள்ளி,ஜோதி,சிந்துஜா, வட்டார ஒருங்கிணைப்பாளர்,பெரிய காலனி மைய குழந்தைகள் மைய பணியாளர் சரிதா , அரசு அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்