திருவண்ணாமலை, மாவட்டம் சேத்துப்பட்டு, தாலுகா ஓதலவாடி, கிராமத்தில் செய்யாற்று, படுகை உள்ளது. இந்த செய்யாற்று, படுகையில் இரவு, நேரங்களில் மாட்டு வண்டிகள் ,மூலம் மணல் கொள்ளையர்கள் மணலை கடத்திக் கொண்டு வந்து மறைவான இடங்களில் பதுக்கி வைத்து. பின்னர் லாரி மூலம் விற்பனை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் சேத்துப்பட்டு, தாசில்தார் சசிகலாவிற்கு, செய்யாற்று கரையோரம் மணல் கொள்ளையர்கள் மணலை கடத்திக் கொண்டு வந்து பதுக்கி வைத்துள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்துசேத்துப்பட்டு, தாசில்தார் சசிகலா, சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்த்த போது. அங்கு மணல் கொள்ளையர்கள் மணலை குவித்து வைத்தது தெரிய வந்தது. இதை அடுத்து போளூர், பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து. அங்கு பதுக்கி வைத்திருந்த 7யூனிட் ஆற்று மணலை பொதுமக்களுக்கு ஏலம் விட்டு,அந்த பணத்தினை பொதுப்பணித்துறை அதிகாரியிடம் தாசில்தார் ஒப்படைத்தார்.