திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த அண்டம்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு வாகன கண்காட்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பிரசன்னா தலைமை வகித்தார். அனைவரையும் முதுகலை ஆசிரியர் பார்த்திபன் வரவேற்றார். கண்காட்சியில் மாணவர்களுக்கான வினாடி வினா சட்டகத்தை மாணவர்கள் விடை அளித்து தெரிந்து கொண்டனர். திருவண்ணாமலை மண்டல போக்குவரத்து மேலாளர் (பயிற்சி) திருஞானம் மாணவர்களுக்கான உறுதி மொழியை வாசித்து போக்குவரத்து விதிகளை பின்பற்றுவதால் ஏற்படக்கூடிய நன்மைகள், விதியை பின்பற்றாமல் போனால் ஏற்படக்கூடிய விளைவுகள் போன்றவற்றை விளக்கினார் .
சாலை பாதுகாப்பு தலைக்கவசம் அணிதல், இருவருக்கு மேல் வாகனங்களில் பயணிக்காதீர்கள் போன்ற பல்வேறு விஷயங்களை ஓட்டுனர் பார்த்திபன் மாணவர்களுக்கு விளக்கினார். இதில் ஆசிரியர்கள் கோவிந்தராஜ், கிருஷ்ணமூர்த்தி, பிரபு மற்றும் பள்ளி இருபால் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் முதுகலை ஆசிரியர் பாண்டியன் அனைவருக்கும் நன்றி கூறினார்.