கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் அருகே கடத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம் மனைவி ரோகிணி. இவரிடமிருந்து நமச்சிவாயபுரத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தனது வங்கியின் கடனை அடைக்க சில வருடங்களுக்கு முன்பு ரூ.19 லட்சம் வாங்கியதாகக் கூறப்படுகிறது.ஆனால் பல வருடம் ஆகியும் செந்தில்குமார் ரோகினிக்கு பணத்தை திருப்பி தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். இந்த நிலையில், விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்டமாக செயல்பட்டு வரும்போது பொருளாதார குற்றப்பிரிவில் தனது பணத்தை திருப்பித் தர வேண்டுமென ரோகிணி மனு அளித்திருந்தார்.
இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ரோகிணி மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தனது பணத்தை மீட்டு தர வேண்டும் என தற்கொலைக்கு முயன்றார்.இதனைப் பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.