பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் கடைபிடிக்க வேண்டியது ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியமானது அதுதான் சமூக வளர்ச்சிக்கும், சமூக பாதுகாப்பிற்கும் அடித்தளமானது அதைவிட முக்கியமானது தனிமனித ஒழுக்கம் யூனியனில் சமூகத்தில் தனிமனித ஒழுக்கம் அனைவராலும் கடைபிடிக்கப்பட்டாலே போதும் சமூகத்தை யாரும் சீரமைக்க வேண்டாம் அதுவே தன்னை மிக மிக சிறப்பாக பயணித்துக் கொள்ள தயாராக இருக்கிறது.
பெண் விடுதலை பற்றி பேசும் அதே வேளையில் பெண்களே சமூக சீர்கேட்டிற்கு காரணமாய் இருப்பது பெரும் கொடுமை தான் ஆம் சென்னை ஐஐடி நிறுவனத்தில் பணியாற்றும் இளம் பெண் ஒருவர் ஆண் விபச்சாரம் நண்பருடன் டேட்டிங் சென்றதும் அந்த விபச்சார ஆணிடம் நகை பறிகொடுத்த செய்தி தான் அனைத்து செய்தித்தாள்களையும் அலங்கரித்து இருக்கிறது.
ஆம் வசதி படைத்த திருமணமாகாத அந்த இளம் பெண் ஆண் விபச்சாரத்திற்கென்று ஆன்லைனில் துவக்கப்பட்ட ஒரு ஆப்பில் இருந்து ஒரு ஆண் நண்பரை தேர்வு செய்து அவரோடு காலையிலிருந்து பல்வேறு இடங்களுக்கு சுற்றி திரிந்திருக்கிறார். அதை தொடர்ந்து சென்னையின் முக்கிய சாலையில் உள்ள பிரபல ஸ்டார் ஹோட்டலில் ஒரு அறை எடுத்து தங்கி உல்லாசமாக இருந்திருக்கிறார்கள். அதற்கான பணத்தைப் பெற்றுக் கொண்டு ஆண் விபச்சாரி கிளம்பி விட அதன்பிறகு குளித்துவிட்டு வீட்டுக்கு சென்ற இளம் பெண் தனது 4 பவுண் தங்கச் சங்கிலி காணாமல் போனது கண்டு அதிர்ச்சடைந்திருக்கிறார்.
அதன் பிறகு ஆன்லைனில் தன்னுடன் இருந்த ஆண் விபச்சாரியை தொடர்பு கொள்ள முயற்சித்து இருக்கிறார். அவர் அந்த ஆன்லைனில் இருந்து தனது தொடர்பை துண்டித்துக் கொள்ள 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகை பறிபோய் விட்டது என்ற பதட்டத்தில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு சென்று நடந்தவற்றை புகாராக கொடுத்து விபச்சார ஆண் நண்பரை கண்டுபிடித்து தருமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்.
சமூக சீர்கேடு எந்த அளவிற்கு மலிவாக இருக்கிறது. என்பதற்கு இந்த சம்பவம் மிகப் பெரிய உதாரணம் இந்த சம்பவம் நகை திருட்டால் மட்டும் வெளிவந்திருக்கிறது. இது போன்ற சம்பவங்கள் வளர்ந்த நகரங்களில் ஆயிரக்கணக்கான சம்பவங்களை காவல்துறையினரும், சமூக ஆர்வலர்களும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.
ஆனால் திருடனா பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல தங்களின் தனிமனித ஒழுக்கத்தை அனைவரும் கடைப்பிடிக்காத வரை சமூக மாற்றம் என்பதற்கு வாய்ப்பே இல்லை என்பது தான் உண்மை.