திருவண்ணாமலையில் கமல்ஹாசனின் பிறந்தநாள் விழா மக்கள் நீதி மய்யம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது.திருவண்ணாமலை தென்கிழக்கு மாவட்ட மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் அக்கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனின் 70-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
இதையொட்டி திருவண்ணாமலை அய்யம்பாளையம் புதூரில் உள்ள லிட்டில் ஹார்ட்ஸ் மனநல காப்பகத்தில் தங்கியுள்ள சிறுமிகளுக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் நீதி மய்யத்தின் தென்கிழக்கு மாவட்ட செயலாளர் இரா.அருள் தலைமை தாங்கி மனவளர்ச்சி குன்றிய 46 பேருக்கு உணவு மற்றும் படுப்பதற்கான பாய் ஆகியவற்றை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ், மாவட்ட துணை செயலாளர் சுகானந்தம், இளைஞரணி சக்தி தினகரன், நற்பணி இயக்க அணி கமல் வெங்கடேஷ், பொறியாளர் ஹரிகரன், ஒன்றிய செயலாளர்கள் தில்லை ராமகிருஷ்ணன், ரமேஷ், முருகன், மண்டல இளைஞரணி ரஞ்சித்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.