அரசின் திட்டங்களை கடைக்கோடி மனிதருக்கும் கொண்டு சேர்க்கும்அதிகாரிகளால்தான் கனவுகள் மெய்ப்படுகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள பதிவில், “ஒரு திட்டத்தின் வெற்றி என்பது அதன் நோக்கத்தைவிடவும் அதனை நடைமுறைப்படுத்தும் முறையில்தான் அடங்கியிருக்கிறது. நமது திராவிட மாடல் அரசின் திட்டங்களைக் கடைக்கோடி மனிதருக்கும் கொண்டு சேர்க்கும் இத்தகைய அதிகாரிகளால்தான், நமது கனவுகள் மெய்ப்படுகிறது!” இவ்வாறு தெரிவித்துள்ளார்.