கள்ளக்குறிச்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 9 அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கான வட்டார அளவில் நடைபெறும் கலைத் திருவிழா நிகழ்ச்சி கள்ளக்குறிச்சி ஆர்.சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட உதவி திட்ட அலுவலர் மணி, வட்டார கல்வி அலுவலர்கள் உலகநாதன், சுபத்ரா, வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கலைத் திருவிழா போட்டியில் 9 அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளான மாதவச்சேரி திருமுருகன் நடுநிலைப்பள்ளி, கருணாபுரம் டேனிஷ் மிஷன் துவக்கப்பள்ளி, கள்ளக்குறிச்சி டேனிஷ் மிஷன் துவக்கப்பள்ளி, கள்ளகுறிச்சி ஆர்.சி நடுநிலை பள்ளி, நீலமங்கலம் ஸ்ரீராம் அரசு உதவி பெறும் நடுநிலை பள்ளி, இந்திலி அரசு உதவி பெறும் பள்ளி, தண்டலை அல்ரகுமான் அரசு உதவி பெறும் பள்ளி, அகரக்கோட்டாலாம் ஆர்சி நடுநிலைப்பள்ளி, பெரியசிறுவத்தூர் காந்தி அரசு உதவி பெறும் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.
6 முதல் 8ம் வகுப்பு வரை 11 வெற்றியாளர்கள், 3ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை 8 வெற்றியாளர்கள், ஒன்றாம் வகுப்பு முதல் 2ம் வகுப்பு வரை 5 வெற்றியாளர்கள் என மொத்தம் 24 பேர் மாவட்ட அளவிலான நடைபெறும் கலைத் திருவிழாவில் கலந்து கொள்கின்றனர். இந்த கலைத் திருவிழாவில் பரதநாட்டியம் நாட்டுப்புறப்பாடல் நாடகம், என பல போட்டிகள் இருந்தது ஆசிரியர்கள் பெற்றோர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.