சேத்துப்பட்டில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117 வது குருபூஜை விழா மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவண்ணாமலை, மாவட்டம் சேத்துப்பட்டில், பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117 வது குருபூஜை விழா மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம், வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சேத்துப்பட்டு, பேரூர் நகர, திமுக செயலாளர் இரா.முருகன் கலந்துகொண்டு ஆரணி சாலையில் உள்ள காமராஜர் பேருந்து நிலையத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அன்னதானம் பெற்றுக் கொண்டனர். விழா ஏற்பாடுகளை சேத்துப்பட்டு, பசும்பொன் முத்துராமலிங்க தேவர், பேரவை நிர்வாகிகள் சேவல் அறிவழகன், சக்திவேல், ஹரீஷ், ராமச்சந்திரன்,தாமு, பாலாஜி,குப்பாச்சி, பிரபு, பிரசன்னா, ஆகாஷ் மற்றும் இளைஞர்கள், பெரியவர்கள், ஆகியோர் செய்திருந்தனர்.