ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பாவந்தூர் ஊராட்சியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இதைத்தொடர்ந்து, பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் க.கார்த்திகேயன், ஆகியோர் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில், குத்துவிளக்கேற்றி புதிய வகுப்பறைகள் மற்றும் ஆய்வகங்களை திறந்து வைத்து கல்லூரி மாணவ-மாணவிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்கள்.
இந்த நிகழ்வின் போது கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தே.மலையரசன், மாவட்ட ஆட்சித் தலைவர் எம். எஸ் பிரசாந்த், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன், துறையைச் சேர்ந்த உயர்கல்வி துறை அதிகாரிகள், அலுவலர்கள், கல்லூரி முதல்வர்,பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவ மாணவிகள், ஒன்றிய பெரும் தலைவர்கள், துணைத் தலைவர்கள், ஒன்றிய கழகச் செயலாளர்கள், மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.