போளூர் அருகே திமுக சார்பில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவை எம்பி., தரணிவேந்தன், எ.வ.வே.கம்பன் ஆகியோர் வழங்கினர்.
திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், போளூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாராயணமங்கலம்- இஞ்சிமேடு சாலை மேலப்பாளையம் கிராமத்தில் சாலை மேம்பாட்டு திட்டத்தை ஆரணி நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக மாவட்ட செயலாளருமான தரணிவேந்தன் மற்றும் மாநில மருத்துவர் அணி துணை தலைவரும் போளூர் சட்டமன்ற தொகுதி திமுக பொறுப்பாளருமான எ.வ.வே.கம்பன் ஆகியோர் பூமி பூஜை போட்டு துவங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து பெரிய கொழப்பலூர் விடுதியில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கும், சேத்துப்பட்டு தோமினிக் சாவியோ மேல்நிலைப்பள்ளி, புனித அன்னாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அமலராகினி பார்வையற்றோர் பள்ளி கருணை இல்லத்தில் உள்ள மாணவர்களுக்கும் மதிய உணவினை ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன் மற்றும் மாநில மருத்துவர் அணி துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன் ஆகியோர் உணவு வழங்கினர்.
இந்நிகழ்வின் போது மாவட்ட அவைத்தலைவர் ராஜசேகர், பொதுக்குழு உறுப்பினர் கே.வி.ராஜ்குமார், ஒன்றிய பெருங்குழு தலைவர்கள் ராணி அர்ஜுனன், இந்திரா இளங்கோவன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நரேஷ் குமார், மாவட்ட துணை பொருளாளர் பாண்டுரங்கன், சேத்துப்பட்டு பேரூராட்சி தலைவர் சுதா முருகன், நகர செயலாளர் முருகன், ஒன்றிய செயலாளர்கள் எழில்மாறன், மனோகரன், விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் மணிகண்டன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.