கள்ளக்குறிச்சியில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பிரசாந்த் வெளியிட்டார் . உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சத்திய நாராயணன், வருவாய் கோட்டாட்சியர் லூர்துசாமி, வட்டாட்சியர் கமலக்கண்ணன், மற்றும் தேர்தல் தனி வட்டாட்சியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாவட்டத்தில் நான்கு சட்டமன்ற தொகுதிகளில் 11 லட்சத்து 25 ஆயிரத்து 038 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 5 லட்சத்து 62ஆயிரத்து, 436 பேர். பெண் வாக்காளர்கள் 5 லட்சத்து 62 ஆயிரத்து 362 பேர். மூன்றாம் பாலினத்தவர் 240 பேர் வாக்காளர் பட்டியலில் உள்ளனர்.
மேலும் மாவட்டத்தில் சிறப்பு முகாம்கள் நவம்பர் 16, 17 மற்றும் 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறும் எனவும் இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 6ம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.