விருத்தாசலத்தில் பள்ளி மாணவர்களுக்கான வட்டாரக் கலை திருவிழா 6 நாட்கள் நடைபெறுகிறது. கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அதை சுற்றி உள்ள பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான பள்ளி கல்வித்துறை சார்பில், பள்ளி அளவிலான நடைபெறும் மாணவர்களுக்கான வட்டாரக் கலை திருவிழா போட்டிகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நடைபெறுகிறது.
விருத்தாசலத்தை சுற்றியுள்ள புதுக்கூரைப்பேட்டை வட்டார வள மையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வயலூர் நகராட்சி நடுநிலைப்பள்ளி ஆகிய மூன்று இடங்களில் கவின் கலை தனி நடிப்பு நாடகம் நடனம் மற்றும் இசை உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதன்படி புதுக் கூரைப்பேட்டை வட்டார வளமையும் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் மயிலூர் நகராட்சி நடுநிலைப்பள்ளி என மூன்று இடங்களில் நடன போட்டிகள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார் ஆசிரியர்கள் சாந்தி ஸ்ரீ நடன ஆசிரியர்கள் யோகா ராதிகா மகாலட்சுமி ஆகியோர் இப்போட்டிகளில் நடுவர்களாக இருந்து தேர்வு செய்தனர். இப்போட்டிகளில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் கடலூரில் நடைபெறும் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டியில் கலந்துகொள்ள தகுதியானவர்கள் ஆவர்.